About

கிருத்திகன். ஈழத்தில், வடமராட்சியில் உள்ள நவிண்டில் என்கிற குக்கிராமத்தில் பிறந்தவர். ரென்னிஸ் பந்துகளை மிதமான வேகத்தில் out-swing, in-swing வீசுவது தவிரக் குறிப்பிட்டுச்சொல்லும்படியான திறமைகள் ஏதுமற்றவர். 2006ம் வருடம் கனடாவுக்குக் கல்வி நிமித்தம் புலம் பெயர்ந்த இவர், பாடசாலைக் காலங்களில் தமிழ்த்தின, ஆங்கிலதினப் போட்டிகளில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார், நாடகம் நடித்திருக்கிறார், க.பொ.த (சா/த) பரீட்சையில் தமிழில் சிறப்புச்சித்தி பெற்றவர் என்கிற மூன்றே காரணங்களுக்காக 2009 இல் மெய்சொல்லப்போறேன் என்கிற வலைப்பதிவை ஆரம்பித்து இந்தியர்களுக்காக எழுதிக்கொண்டிருந்தார். “எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக” இவர் கிறுக்கிய பலவற்றுக்குப் பலவிடங்களிற் செருப்படி கிடைத்ததுண்டு.  பெயரிலாதவர் குட்ட “இதுக்கு நாக்கைப் புடுங்கிக்கொண்டு சாகலாம்” என்று ஞானோதயம் பெற்று எழுதுவதைக் குறைத்துக்கொண்டார். விக்கிரமாதித்தன் போல் முயன்று கனடாவின் “வாந்தி முற்போக்கு பேதி பிற்போக்கு” கூட்டத்துடன் நட்பாகி, உலகத்தைத் திருத்தப் புறப்பட்டவர் இரத்தம் சுண்டிப்போன ஒரு நாளிலே தன் பள்ளிக்காலத் தோழர்களிடம் திரும்பிவந்துவிட்டார். இப்போது விதவிதமாகக் குளிர்களி சாப்பிட்டுக்கொண்டும், பல்தேச உணவுகளைச் சுவைத்துக்கொண்டும், செல்லம் கொஞ்சிக்கொண்டும் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s